பவானிசாகரில் யானை குன்னூரில் சிறுத்தை சாவு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் கொத்தமங்கலம் சுஜில்குட்டை வனப்பகுதியில் நேற்று காலை வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் ரோந்து சென்றனர். ஓரிடத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்ததை கண்டனர். அந்த பெண் யானை எப்படி இறந்தது என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண் சிறுத்தை பலி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை பிரிவு, லேம்ஸ்ராக்  காவல்சுற்று பகுதிக்கு உட்பட்ட சிங்கார தனியார் தேயிலை தோட்டத்தில் பெண்  சிறுத்தை ஒன்று நேற்று இறந்து கிடந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் அங்கேயே சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது‌. சிறுத்தை இறப்புக்கான  காரணம் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.