குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை, வெள்ளித்திரையில் கலக்கி வரும் சிவாங்கி, தற்போது பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் மகனுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை தன்னுடைய youtube பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அடிக்கடி ஆல்பம் பாடல்களை பாடி யூடியூப் பக்கத்தில் வெளியிடும் சிவாங்கி, தற்போது பிரபல இசையமைப்பாளராக இருக்கும் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்த்தனுடன் இணைந்து பாடலை பாடியிருப்பதுடன், கவர் சாங்கிற்காக ரொமான்ஸூம் செய்துள்ளார்.
அந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்துள்ளது. 23 வயது ஆகும் வித்தியாசாகரின் மகன் ஹர்ஷவர்த்தன் உடன் இணைந்து சிவாங்கி அடிக்கடி ஆல்பம் பாடல்களை பாடி அதை வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் பல லட்சம் பார்வையாளர்களை பெற்று வருகிறது. இப்போது ஹர்ஷவர்த்தனுடன் இணைந்து செம்ம ரொமான்ஸ் செய்திருக்கும் சிவாங்கியின் வீடியோவும் குறிப்பிடத்தகுந்த பார்வைகளை பெற்றுக் கொண்டிருக்கிறது. வீடியோவில் நடனமும் ஆடியிருக்கிறார் சிவாங்கி.
சூப்பர் சிங்கரில் அறிமுகமான அவர், அந்த போட்டியில் டைட்டிலை வெல்லாவிட்டாலும் இதயத்தை வென்றார். அதன் தொடர்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அறிமுகமானார் சிவாங்கி. இதில் இவருடைய சுட்டித்தனம் மற்றும் வெள்ளந்தி குணம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து தமிழகத்தின் சின்னத்திரையின் செல்லப்பிள்ளையாக உருவெடுத்தார். டான் படம் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த அவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. அதில் தனக்கு செட்டாகும் கேரக்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.