சபரிமலை: சபரிமலையில் மண்டலகாலம் தொடங்கிய பின்னர் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. டிச., 6ம் தேதியான இன்று சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்டலகாலம் தொடங்கிய நவ., 17 தவிர்த்து எல்லா நாட்களிலும் தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். சனி, ஞாயிறு நாட்களில் கூட்டம் குறைவாகவும், இதர நாட்களில் கூட்டம் அதிகமாகவும் உள்ளது.
நவ., 28 அதிக பட்சமாக 87 ஆயிரத்து 492 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அதை முறியடிக்கும் வகையில் நேற்று 89 ஆயிரத்து 737 பேர் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெரிய நடைப்பந்தல் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
நெய்யபிேஷகம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தவும், அப்பம், அரவணை பிரசாதம் வாங்கவும் நீண்ட கியூ காணப்பட்டது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தினமும் 90 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இன்று டிச., 6ம் தேதிக்காக சன்னிதானத்திலும், பம்பையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய அதிவிரைவுப்படையினர் சன்னிதானத்தில் அணிவகுப்பு நடத்தினர். பக்தர்களிடம் நடத்தப்படும் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர், போம்ப் டிடெக்டர் சோதனைகளுடன், டிரோன் கண்காணிப்பும் நடக்கிறது. இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற 100 போலீசார் சன்னிதானம் வந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement