மான் கொம்பு இரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்: Proekt அறிக்கையால் பரபரப்பு


ரஷ்ய ஜனாதிபதி புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் மான் இரத்தக் குளியல் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை தகவல் தெரிவித்துள்ளன.

இடறி விழுந்த புடின்

கடந்த வாரம் மாஸ்கோவில் உள்ள தனது வீட்டின் படிக்கட்டில்  இறங்கும் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடறி விழுந்தார் என “தி டெலிகிராம்” செய்தி நிறுவனம் சமீபத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

5 படிக்கட்டுகளை தாண்டி கீழே விழுந்த புடினுக்கு முதுகு தண்டின் அடிப்பகுதி எலும்பு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் புடினுக்கு இதனால் தானாக மலம் வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான் கொம்பு இரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்: Proekt அறிக்கையால் பரபரப்பு | Russia Putin S Deer Blood Bath TreatmentAFP

உக்ரைன் உடனான போர் தொடங்கியதில் இருந்து, ஜனாதிபதி புடினின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக பல செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து தகவல் வெளியிட்டு வருகின்றன.

இவ்வாறு வெளிவந்துள்ள செய்திகளில், புடினுக்கு இரத்த புற்றுநோய், குடல் புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், நரம்பு தளர்ச்சி நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது,  ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை குறித்து உறுதி செய்யப்படவில்லை.

மான் இரத்தத்தில் குளியல்

புடின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து சமீபத்தில் ரஷ்ய புலனாய்வு செய்தி நிறுவனமான Proekt முக்கிய தகவல் ஒன்றிணை வெளியிட்டுள்ளது.

அதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மான் கொம்பு இரத்தத்தில் குளிப்பதை சிகிச்சையாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மான் கொம்பு இரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்: Proekt அறிக்கையால் பரபரப்பு | Russia Putin S Deer Blood Bath Treatment

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் பரிந்துரையின் பேரில் இது எடுக்கப்பட்டது என்றும் அறிக்கை மேலும் கூறுகிறது.

விலங்குகளின் இரத்த அடிப்படையிலான சிகிச்சையை மேற்கொள்பவர் ஜனாதிபதி புடின் மட்டும் அல்ல என்று அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் மற்றும் காஸ்ப்ரோம் தலைவர் அலெக்ஸி மில்லர் உட்பட கிரெம்ளினின் உயரடுக்கு வட்டத்தில் முக்கிய நபர்கள் இந்த சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான் கொம்பு இரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்: Proekt அறிக்கையால் பரபரப்பு | Russia Putin S Deer Blood Bath TreatmentMEGA

பாரம்பரிய சிகிச்சை முறையா?

மானின் கொம்பு ரத்தத்தில் குளிப்பது ரஷ்யா, கொரியா மற்றும் சீனாவின் சிறந்த மருத்துவ சிகிச்சை முறையாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் சைபீரியாவைச் சேர்ந்த அல்தாயின் சிவப்பு மான் கொம்புகள் உடல் புத்துணர்ச்சிக்கு உதவும் என்பதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.