சென்னை,:சென்னை, படூரில் உள்ள ‘ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் சயின்ஸ்’ கல்வி நிறுவனம், ‘ராயல் என்பீல்டு’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, ராயல் என்பீல்டு பயிற்சி மையத்தை திறந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, எச்.ஐ.டி.எஸ்., கல்வி நிறுவன ஊழியர்களுக்கு, ‘ஆட்டோமொபில் இன்ஜினியரிங்’ மற்றும் தொழில்நுட்பத்தில் பயிற்சி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள், இன்ஜின் மாடல்கள், தயாரிப்பு ஆலை, விற்பனை மற்றும் பராமரிப்பு என அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆசிரியர்களும் அறிந்துகொள்ள, வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement