குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த ஒன்றாம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையடுத்து, 2ஆம் கட்டமாக, அகமதாபாத், காந்திநகர், வதோதரா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதலமைச்சர் பூபேந்திர படேல், ஹர்திக் படேல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 93 தொகுதிகளிலும் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.
இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி இன்று வாக்களித்தார். பிரதமர் மோடி வாக்களிக்க வருகை தந்ததால் அங்கு பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
பிரதமரைக் காண அங்கு பெருமளவில் மக்களும் திரண்டு நின்று இருந்தனர். வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
newstm.in