விஜய்யின் 30 ஆண்டு கலைப்பயணம்! ஆதரவற்றோர்களுக்கு பெட்ஷீட் வழங்கிய ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் 30 ஆண்டுகள் கலைப்பயணம் நிறைவை கொண்டாடும் விதமாக தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அவருடைய ரசிகர்கள் குளிர் மற்றும் பனி காலம் என்பதால் என்பதால் வீடில்லாத ஆதரவற்றோர்களுக்கு போர்வை (பெட்ஷீட்) வழங்கினார்.  நடிகர் விஜய் திரையுலகத்திற்கு வந்து 30 ஆண்டுகள் முடிவடைந்து 31 வது ஆண்டில் கலைபயணத்தில் அடி எடுத்து வைக்கும் நிகழ்வினை அரூர் நகர இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தீர்த்தமலை அடிவாரத்தில் கொண்டாடினர்.

அகில இந்திய மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தன் உத்ரவின் பெயரில் தருமபுரி மாவட்ட தலைவர் தாபா எம்.சிவா மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.விஜயகாந்த் அறிவுறுத்தலின்படி தீர்த்தமலை அடிவாரத்தில் உள்ள வீடுகள் இல்லாத சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு பனி மற்றும் குளிர்காலத்தில் உபயோகிக்கும் வகையில் இளைஞரணி நகரத் தலைவர் ஜா.மதலை முத்து தலைமையில் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு போர்வை மற்றும் இரவு உணவு அளித்தனர்.

dharma

விஜய்யின் 30 ஆண்டுகால பயணத்தை ரசிகர்கள் பலரும் இணையத்திலும் கொண்டாடி வருகின்றனர்.  நேற்று விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் இருந்து தீ தளபதி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகபடுத்தி இருந்தது.  இந்நிலையில் இன்று தளபதி 67 படத்தின் பூஜை நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.