ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்… 55 அடி ஆழத்தில் சிக்கி உயிருக்கு போராட்டம்!

மத்திய பிரதேச மாநிலம், பீட்டல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மாண்டவி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் அங்குள்ள திறந்கவெளியில் இன்று மாலை விளையாடி கொண்டிருந்தான்.

வீட்டு பணி நிமித்தம் காரணமாக சிறுவனின் தாய் அவனை கவனக்குறைவாக விட்டு விட்டதாக தெரிகிறது. இதன் விளைவாக, விளையாடி கொண்டிருந்த சிறுவன், அந்தப் பகுதியில் சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.

வெகுநேரம் ஆகியும் மகனை காணாததால் சந்தேகம் அடைந்த தாய் வெளியில் வந்து பார்த்தபோது தமது மகன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சிறுவனின் தாய் கதறி அழுததை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், மொத்தம் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில், சிறுவன் 55 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதை அறிந்தனர். உடனே அவர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். சில நிமிடங்களில் து மாண்டவி கிராமத்துக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர், சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் சி்க்கியுள்ள சிறுவன் 55 அடி ஆழத்தில் உள்ளதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாகவும், இரவு நேரம் என்பதால் இருட்டை கண்டு சிறுவன் அஞ்சிிவிட கூடாது என்பதால், ஆழ்துளை கிணற்றி்ல் ஒளி பாய்ச்சப்பட்டு வருவதாதவும் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சிறுவனை உயிருடன் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முழுமூச்சில் மேற்கொள்வோம் என்று மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளை கிணறுகளில் சிறுவர், சிறுமிகள் தவறி விழும் துயர சம்பவங்களும், இதில் சி்ககி அவர்கள் உயிரிழக்கும் சோக நிகழ்வுகளும் நம் நாட்டில் அவ்வபோது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும், பணிமுடிந்ததும் ஆழ்துளை கிணற்றை உரிய பாதுகாப்பான முறையில் மூட வேண்டும் என்ற விழிப்புணர்வும், சமூக பொறுப்புணர்வும் நம் மக்களுக்கு ஏற்படவில்லை என்பதற்கு மத்தியப் பிரதேசத்தில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவமே உதாரணம்.

இதேபோன்று, கடந்த ஜூன் மாதம் இந்த மாநிலத்தின் சத்தார்பூர் மாவட்டத்துட்பட்ட பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுநத 40 அடி ஆழத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

ஆனால், கடந்த 2020 நவம்பர் மாதம் நிவாரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் நான்கு நாட்கள் போராட்டத்துக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.