நடிகை ஹன்சிகா மௌத்வானி, தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆரம்பத்தில் நடித்து வந்தார். 2011ஆம் ஆண்டில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், அந்த ஆண்டே ஜெயம் ரவியுடன் ‘எங்கேயும் எப்போதும்’, விஜயுடன் ‘வேலாயுதம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
தொடர்ந்து, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ போன்ற காமெடி படங்களிலும் கலக்கினார். சூர்யாவின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றான ‘சிங்கம் 2’ திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். நடிப்பால் பலரை கவர்ந்தது மட்டுமின்றி, செயலாலும் பலரை கவர்ந்தவர் இவர், சில குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டியதை செய்து வளர்த்தும் வருகிறார்.
இவருக்கும், அவரது நீண்ட நாள் நண்பருமான சோஹேல் கத்தூரியா என்பவருக்கும் இடையே நேற்று ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து, பலரும் புதுமண தம்பதியினருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், ஹன்சிகா தம்பதி தங்களின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது, அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும், ஹன்சிகாவை மணக்கோலத்தில் பார்த்த ரசிகர்கள் உள்பட அனைவரும் அந்த புகைப்படங்களை இணையத்தில் சிலாகித்து வருகின்றனர்.
ஹன்சிகா திருமண புகைப்படங்கள்:
ஹன்சிகா தனது மெஹந்தி புகைப்படங்களை முதலில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம், நடிகை கத்திரினா கைஃப்பின் திருமண புகைப்படத்தை நினைவூட்டியதாக சிலர் இணையத்தில் தெரிவித்திருந்தனர். அதேபோல், ஹன்சிகா, கத்திரினா இருவரின் திருமணம் ராஜஸ்தானில்தான் நடந்துள்ளது.
கத்திரினா கைஃப் திருமண புகைப்படங்கள்:
விக்கி கௌஷல் – கத்திரினா கைஃப் திருமண ஆடைகளும், சோஹேல் கத்தூரியா – ஹன்சிகா ஆகியோரின் திருமண ஆடைகளும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாகவும், இரு தம்பதிகளின் உடையின் நிறமும் ஒன்றுபோலவே இருப்பதாகவும் கூறப்பட்டது. ஹன்சிகா, கத்திரினா கைஃப்பின் திருமணத்தில் இருந்து இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.