வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பரிசுப்பொருட்களை விற்று காசு பார்த்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீதான குற்றச்சாட்டு நிரூபனமானதால், அவரை கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில், தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு எதிராக 24 எம்.பி.,க்கள் திடீரென போர்க்கொடி துாக்கியதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தார். ஆட்சி கவிழ்ந்தது. பதவியை ராஜினாமா செய்தார்.
![]() |
இந்நிலையில் இம்ரான் கான், தவறான தகவலுடன் பிரமாண பத்திரத்தை சமர்பித்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பிரதமராக இருந்த போது வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு பரிசுப் பொருட்களை தோஷகானா எனப்படும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் விற்று காசு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் இம்ரான் கானின் வழக்கறிஞர் அலி ஜாபர், 2018-19ல் பரிசு பொருட்களை விற்றதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து இம்ரான் கானை பொது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது.இது தொடர்பான வழக்கினை இன்று விசாரித்த தேர்தல் ஆணையம் குற்றம் நிரூபனம் ஆனதையடுத்து அவரை கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்க கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மறு விசாரணை டிச. 13-ம் தேதி நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement