விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையில் நேற்று நடைபெற்ற எவிக்ஷனில் குயின்சி வெளியேறினார். மேலும் அந்த வாரத்திற்கான கேப்டனாக அஜீம் தேர்வாகி இருந்தார். தற்போது வரை பிக் பாஸ் சீசன் 56 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் வரும் நாட்களில் வைல்ட் கார்டு எண்ட்ரி அரங்கேறும் என்று எதிறப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் வரும் வார இறுதியில் டபுள் எலிமினேஷன் கண்டிப்பாக நடக்கும் என கமல் தெரிவித்து இருக்கிறார். அந்த இருவர் யார் என்பது இந்த வாரத்தில் இறுதியில் தான் தெரியவரும்.
இந்த நிலையில் தற்போது மற்றொன்று செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, அதன்படிப் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு நெகட்டிவ் ட்ரோல்களை பெற்ற காயத்ரி ரகுராம் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் ‘விக்ரமன் தான் இந்த சீசன் டைட்டில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது’ என கூறி இருக்கிறார்.
இவர் அப்படி சொல்ல காரணம் என்னவென்றால் அவருக்கு தான் politically எது சரி என்று தெரியும் என கூறி பாராட்டி இருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.