இவர்கள் இருக்கும் வரை பாஜக வெற்றி பெறாது.. கொளுத்திப்போட்ட திருச்சி சிவா..

தமிழக பாஜக ஓபிசி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் திருச்சி சூர்யா சிவா. இவர் அண்மையில் மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணிடம் பேசிய ஆடியோ விவகாரத்தால் பதவியை இழந்தார். இருப்பினும், கட்சி உறுப்பினராக நீடிக்கலாம் என்றும் நேரம் வரும்போது பதவி தேடி வரும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வந்த திருச்சி சூர்யா இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர் அண்ணாமலைக்கு போட்ட பதிவொன்றில் ”இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் . அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும்” என கூறியிருந்தார்.

இதனை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது;

அன்புள்ள சகோதரரே,

தமிழக பாஜகவுக்கு நீங்கள் ஒரு பொன்னான பரிசு. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் நிச்சயமாக இருப்பீர்கள். கடந்த சில மாதங்களாக உங்கள் தலைமையின் கீழ் இருந்ததில் மகிழ்ச்சி. நீங்கள் திறமையானவர். இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரி வேட்பாளருக்கும் நீங்கள் தகுதி பெற்றவர். இந்திய அரசியலில் உங்களது வளர்ச்சியை பார்க்க விரும்புகிறேன். உங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி அண்ணா. எப்போதும் அன்புடன், என்றென்றும் சகோதரனாக உங்கள் பின்னால் இருப்பேன்.

எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் இருவரும் இனி மகிழ்ச்சியாக இருங்கள். இப்போதாவது கட்சிக்காரர்களை நம்ப முயற்சி செய்யுங்கள். உங்களது குறுக்கீடு இல்லையென்றால் தலைவர் அண்ணாமலையால் அற்புதங்கள் செய்ய முடியும். தயவு செய்து அவருக்கு இடம் கொடுங்கள்.

காயத்ரி ரகுராம் மற்றும் டெய்சி சரணுடன் உங்களது விளையாட்டை காட்டாதீர்கள். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டுமெனில் நீங்கள் இருவரும் என் தலைவனின் வழியில் குறுக்கிட வேண்டாம்.

என் அன்பிற்குரிய அண்ணன் அண்ணாமலை மீது எப்போதும் பாசம் உள்ளவன்.

அண்ணாமலையார் துணை” என இவ்வாறு திருச்சி சூர்யா அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.