புலந்த்ஷெஹர், உத்தர பிரதேசத்தில் நேற்று ஓடும் பஸ்சில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
புதுடில்லியில் இருந்து, உ.பி.,யின் கன்னோஜ் மாவட்டத்தின் சிப்ரமாவ் கிராமத்திற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, டிரைவர் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார்.
அந்தப் பெண்ணுக்கு சக பெண் பயணியர் உதவியதைத் தொடர்ந்து, அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின் டிரைவர், அப்பெண்ணையும், குழந்தையையும் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு, தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement