ஒரே ஒரு ஒப்பந்தம்… டேவிட் பெக்காமை மொத்தமாக முந்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ


எந்த கால்பந்தாட்ட அணியிலும் தற்போது இடம்பெறவில்லை என்றாலும் போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொத்துமதிப்பு மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து சமீபத்தில் விலகிய ரொனால்டோவும், அதே அணியில் கோலோச்சிய டேவிட் பெக்காமும் உலக கால்பந்தாட்ட ரசிகர்களால் கொண்டாடப்படும் முக்கியமான இருவர்.

ஒரே ஒரு ஒப்பந்தம்... டேவிட் பெக்காமை மொத்தமாக முந்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ | Cristiano Ronaldo Richer Than David Beckham

@instagram

இருவரும் ஆடுகளத்திலும், அதற்கு வெளியேயும் சொத்துக்களை ஈட்டியுள்ளனர். தற்போது சவுதி அரேபிய அணிக்காக 172 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள ரொனால்டோவின் மொத்த சொத்துமதிப்பு 410 மில்லியன் பவுண்டுகள் என்றே தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காமின் சொத்துமதிப்பு 368 மில்லியன் பவுண்டுகள் என்றே சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரபல ஊடகவியலாளர் Piers Morgan கடந்த மாதம் முன்னெடுத்த நேர்காணலை அடுத்தே, மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ விலக நேர்ந்தது.

ஒரே ஒரு ஒப்பந்தம்... டேவிட் பெக்காமை மொத்தமாக முந்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ | Cristiano Ronaldo Richer Than David Beckham

Image: Phil Harris

கால்பந்து ஆட்டங்களில் இருந்து ஓய்வுபெறும் கட்டத்தில் இருக்கும் ரொனால்டோவுக்கு கால்பந்தாட்ட வீரர்களில் முதல் பில்லியனர் அந்தஸ்தை அளித்திருந்தது ஒரு ஒப்பந்தம்.

2016ல் Nike நிறுவனத்திற்காக ஆயுள் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார் ரொனால்டோ, குறித்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 1 பில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.