பலியா, உத்தர பிரதேசத்தில் ‘டியூஷன்’ படிக்க வந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மீது, ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நேற்று போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பலியா மாவட்டத்தின் பைரியா பகுதியில் வசிப்பவர் நிதேஷ் குமார்.
இவர் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, வெளியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலையடுத்து, அவரது தாய் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, டியூஷன் ஆசிரியர் நிதேஷ் குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆள் கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement