திமுகவில் இணையும் கோவை செல்வராஜ்… டோன்ட் கேர் என்று சொல்லும் ஓபிஎஸ் ஆதரவாளர்!

தொடரும் உட்கட்சி பூசல்:
இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என கடந்த சில, பல மாதங்களாக அதிமுத ரெண்டு பட்டு இருந்தாலும், கட்சியின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் ஆதரவுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி, தமது ஆதரவாளர்களின் தயவில் மசூடம் சூடி கொண்டுள்ளார்.

கட்சி நிர்வாகிகளில் பலர் வேண்டுமானால் இபிஎஸ் பக்கம் இருக்கலாம். ஆனால் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் என்று ஓபிஎஸ் அணியினர் இன்றும் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர். ஆனால் இந்த அணியில் எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் என விரல் விட்டு எண்ணக்கூடிய சீனியர்களே ஓபிஎஸ் பக்கம் இருந்து வருகின்றனர்.

எங்கள் அணியில் இருக்கும் ஓபிஎஸ் விசுவாசிகள் எண்ணிக்கையில் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் 50, 100 ஆட்களுக்கு சமம் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பராக்கிரமமாக கூறி வந்தனர். அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி அளிப்பதை போன்றதொரு சம்பவம் ஓபிஎஸ் முகாமில் அண்மையில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர் அதிமுக ஓபிஎஸ் அணி கோவை மாநகர மாவட்ட செயலாளராக இருந்து வந்த கோவை செல்வராஜ்.

ஓபிஎஸ் மீது அதிருப்தி:
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்களது சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இனியு் இருக்க விரும்பவில்லை என்பதே ஓபிஎஸ் அணியில் இருந்து தான் விலகுவதற்கு கோவை செல்வராஜ் கூறிய முக்கியமான காரணம். அத்துடன் ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை மீது உரிய நடவடிக்கை கோராத ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் புறக்கணிப்பதாகவும் அவர் சாடியிருந்தார்.

காரணங்கள்:
இந்த காரணங்களுடன், அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ் தரப்புக்கு இணையாக டஃப் கொடுக்கும் வழக்கறிஞரை களமிறக்காதது, தன் பக்தம் சாய தயாராக இருக்கும் இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களை வளைத்து போடாமல் வாய்ப்பை கோட்டை விடுவது என்பன போன்ற ஓபிஎஸ்சின் அணுகுமுறையில் ஏகப்பட்ட அதிருப்தியில் இருந்தாராம் கோவை செல்வராஜ். இத்துடன் தான் வகித்துவந்த அதிமுக ஓபிஎஸ் அணி கோவை மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டதும் ஓபிஎஸ் மீதான அவரது ஆத்திரம் அதிகமாகி. அதிமுகவில் இருந்தே விலகும் முடிவை எடுத்துள்ளார் அவர்.

அதிமுகவில் இருந்து விலகுபவர்கள் அனேகமாக ஐக்கியமாகும் இடம் திமுகதான். எழுதப்படாத இந்த விதியை தமிழக பாஜக சமீபகாலமாக மாற்றி எழுதி வருகிறது. நயினார் நாகேந்கிரன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போது தாமரை கட்சியில் மு்க்கிய இடத்தை வகித்து வருகின்றனர். இவர்களை போல, அதிமுகவில் இருந்து விலகிய காங்கிரஸ்காரரான கோவை செல்வராஜ், பாஜகவில் இணைவாரா அல்லது திமுகவில் ஐக்கியம் ஆவாரா? என்ற கேள்வி சில நாட்களாக தமிழக அரசியல் அரங்கில் வமலம் வந்து கொண்டிருந்தது.

திமுகவில் ஐக்கியம்:
இந்த கேள்விக்கு விடையாக, கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான

தலைமையில் நாளை அவர் திமுகவி்ல் இணைய உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவி்க்கின்றன. கொங்கு மண்டலத்தில் திமுக இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து வரும் செந்தில் பாலாஜியின் சீரிய முயற்சி தான் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

டோன்ட் கேர்:
‘கோவை செல்வராஜ் அடிப்படையில் காங்கிரஸ்காரர். இவர் திமுகவில் இணைவதால் அதிமுகவுக்கு இழப்பேதும் இல்லை. கட்சியின் உண்மையான விசுவாசிகள் அதிமுகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டார்கள்’ என்கிறார் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான ஆவின் வைத்தியநாதன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.