பற்ற வைத்த திருச்சி சூர்யா; பாஜகவில் பரபரப்பு; பாகம்-2

திமுக எம்.பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா. தமிழக பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார். பாஜவுக்கு சென்ற பிறகு திமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் குறித்து வேற லெவலுக்கு விமர்சித்து பேசி வந்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரண் என்பவரை ஆபாசமாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒரு ஆடியோ வெளியாகி பாஜகவின் ஒட்டுமொத்த மானத்தையும் கப்பலில் ஏற்றியது.

இந்நிலையில் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக டிவிட்டர் மூலம் அறிவித்துள்ள சூர்யா சிவா கூடுதலாக வைத்துள்ள கோரிக்கை ஒன்று பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கீழ்க்காணும் லிங்க்கில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:

அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்.

வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜ இரட்டை இலக்கத்தை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும்.

இல்லை என்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜ உடனான உறவை நான் முடித்துக்கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி. இவ்வாறு சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூர்யா சிவா கட்சியை விட்டுச் செல்வது பாஜகவுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் அவர் சொல்லி இருக்கும் வார்த்தை பாஜகவில் விஸ்வரூபம் எடுக்கும் என்றே பரவலாக பேசப்படுகிறது.

ஏற்கனவே கே.டி.ராகவன் பூஜை அறையில் செய்த பலான லீலை பற்றிய வீடியோவை மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டபோது, கேசவவிநாயகத்தின் பெயர் பெரிதும் அடிப்பட்டது.

இந்த சுவடு மறைவதற்குள் பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண்-சூர்யா சிவா ஆடியோவிலும் அதே கேசவவிநாயகம் பெயரே அடிபட்டிருக்கும் விவகாரம் தான் பாஜகவில் புயலை கிளப்பி உள்ளது.

இதற்கிடையே திருமணம் செய்து கொள்ளாத ஆர்எஸ்எஸ் பிரமுகரான கேசவவிநாயகம் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலேயே தங்கி உள்ளதாகவும் அங்கிருந்தபடியே பல்வேறு விவகாரங்களில் கேசவவிநாயகம் தலையிடுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், கேசவவிநாயகத்துக்கு இடையே பனிப்போர் நடப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேசவ விநாயகத்தை கட்சியில் இருந்து நீக்காவிட்டால் பாஜகவுக்கு வளர்ச்சி இருக்காது என்பதுபோல் சூர்யா சிவா வெளியிட்டுள்ள தகவல் பாஜகவில் புயலை கிளப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.