பலம் பொருந்திய ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி அளித்த மொராக்கோ: காலிறுதிக்கு தகுதி

கத்தார் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் பலம் பொருந்திய ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது மொராக்கோ.

நாக் அவுட் சுற்றில் மொராக்கோ, ஸ்பெயின்

கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் தற்போது நாக் அவுட் சுற்றுகள் நடந்து வருகிறது. இதுவரை அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, போலந்து அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியுள்ளன.

பலம் பொருந்திய ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி அளித்த மொராக்கோ: காலிறுதிக்கு தகுதி | Resilient Moroccans Cause Huge World Cup Upset

@getty

இன்றைய நாக் அவுட் சுற்றில் மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதின. தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையான போராடினர்.
ஆனால் அது பலனளிக்கவில்லை.

இதனையடுத்து முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதியிலும் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இரு அணியும் 0 – 0 என சமனிலை வகித்தது.

பலம் பொருந்திய ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி அளித்த மொராக்கோ: காலிறுதிக்கு தகுதி | Resilient Moroccans Cause Huge World Cup Upset

@reuters

காலிறுதிக்கு முன்னேறியது

இதையடுத்து, கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இறுதியில், மொராக்கோ அணி 3-0 என்ற கணக்கில் பலம் பொருந்திய ஸ்பென் அணியை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

பலம் பொருந்திய ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி அளித்த மொராக்கோ: காலிறுதிக்கு தகுதி | Resilient Moroccans Cause Huge World Cup Upset

@reuters

இன்னொரு நாக் அவுட் ஆட்டத்தில் மோதும் போர்த்துகல் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளில் ஒன்றுடன் காலிறுதியில் மொராக்கோ அணி போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பலம் பொருந்திய ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி அளித்த மொராக்கோ: காலிறுதிக்கு தகுதி | Resilient Moroccans Cause Huge World Cup Upset

@reuters

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.