புடினுக்கு பலத்த நெருக்கடி…ரஷ்ய விமான தளத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்:செயற்கைக்கோள் புகைப்படம்


ரஷ்யாவின் முக்கிய விமான தளத்தில் உக்ரைனின் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் நடத்திய தாக்குதல் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை மேக்ஸர் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய விமான தளத்தில் தாக்குதல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைனில் தாக்குதல் நடத்தி வந்த ka-52 ரக ஹெலிகாப்டரை உக்ரைனிய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது ஜனாதிபதி புடினுக்கு பலத்த அடியாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் ரஷ்யாவின் இரண்டு முக்கிய விமான தளங்கள் மீது உக்ரைனிய படைகள் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி ஜனாதிபதி புடினுக்கு கூடுதல் அதிர்ச்சி வழங்கியுள்ளனர்.

புடினுக்கு பலத்த நெருக்கடி…ரஷ்ய விமான தளத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்:செயற்கைக்கோள் புகைப்படம் | Putin Informed Amid Explosions At Russian AirbasesMaxar

இது தொடர்பாக மாஸ்கோ வெளியிட்டுள்ள குறிப்பில், இரண்டு ரஷ்ய தளங்கள் மீது உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இதில் மூன்று ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

அத்துடன் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், சரடோவ் மற்றும் ரியாசான் பிராந்தியங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து விளாடிமிர் புடினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியதை ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

புடினுக்கு பலத்த நெருக்கடி…ரஷ்ய விமான தளத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்:செயற்கைக்கோள் புகைப்படம் | Putin Informed Amid Explosions At Russian AirbasesMaxar

செயற்கைக்கோள் புகைப்படம்

ரஷ்ய விமான தளங்கள் மீது உக்ரைன் நடத்திய இந்த தாக்குதல் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை மேக்ஸர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் ரஷ்ய விமான தளத்தின் மீது போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதும், ஆங்காங்கே உக்ரைன் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதல் அடையாளங்கள் இருப்பதும் தெளிவாக தெரிகிறது.

இந்த விமான தளத்தில் நீண்ட தூரம் தாக்க கூடிய போர் விமானங்கள் நிற்க வைக்கப்பட்டு இருப்பதும், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

புடினுக்கு பலத்த நெருக்கடி…ரஷ்ய விமான தளத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்:செயற்கைக்கோள் புகைப்படம் | Putin Informed Amid Explosions At Russian Airbases Maxar



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.