மாண்டியா, : ”மைசூரு – பெங்களூரு இடையேயான, மேம்பாலத்துடன் கூடிய மத்துார் நெடுஞ்சாலை இன்று திறக்கப்பட உள்ளது,” என மைசூரு தொகுதி பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹா கூறினார்.
மைசூரு – பெங்களூரு இடையே விரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியான மேம்பாலத்துடன் கூடிய மத்துார் நெடுஞ்சாலை இன்று திறக்கப்படுகிறது.
இது குறித்து, முகநுால் நேரலையில் பிரதாப் சிம்ஹா கூறுகையில், ”மத்தூர் நெடுஞ்சாலை நவம்பர் இறுதிக்குள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், ஐந்தாறு நாட்களாக மழை பெய்து வருவதால் சாலை பணிகள் தாமதமானது.
மேம்பாலத்தில் இணைப்பு வேலை, சுமை சோதனை, குறியிடுதல் ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன.
”இந்த சாலை இன்று திறக்கப்படுகிறது. மைசூரு –பெங்களூரு செல்லும் பயணியருக்கு 15- முதல் 20 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும்.
”ஸ்ரீரங்கப்பட்டணம் புறவழிச்சாலையும் ஓரிரு நாட்களில் திறக்கப்படும்.
‘ஹனகரே, யாலியூர், இந்தாவலு உள்ளிட்ட பல இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது.
”இந்த பணிகள் முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தேவை,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement