லங்கா பிரீமியர்லீக் கிரிக்கட் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவௌ மகிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது.
அணிகளின் தலைவர்கள் பற்றிய விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கமைவாக யாழ்ப்பாணம் அணிக்கு திசர பெரேராவும், காலி அணிக்கு குசல் மெண்டிசும் தலைமை தாங்குகி;ன்றனர். கொழும்பு அணிக்கு அஞ்சலோ மெத்தியுஸ் தலைமை தாங்குகிறார்.தசுன் ஷானக்க தம்புள்ளை அணிக்கும், வனிது ஹசரங்க கண்டி அணிக்கும் தலைமை தாங்குகின்றனர்.