ராஜ்கோட், குஜராத்தில் 100 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த மல்யுத்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில், ராஜ்கோட்டில் உள்ள பூங்கா அருகே மர்ம நபர் ஒருவர் தன்னிடம் பாலியல் சேட்டை செய்ததாக, ஆசிரியை ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த கவுஷல் பிபாலியா, 24, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது:
பிபாலியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
தன் ஆடைகளை கழற்றி, பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக தொல்லை தந்து இன்பம் அடைந்துள்ளார்.
குறிப்பாக சாலையில் செல்லும் பெண்களின் பின்பக்கத்தை தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானம் கருதி புகார் தரவில்லை.
இவ்வாறு போலீசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட கவுஷல் பிபாலியா, 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை மாநில அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில், 74 கிலோ பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement