indonesia earthquake: மீண்டும் நடுங்கிய பூமி…. பீதியில் உறைந்த மக்கள்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி, 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் இன்று அங்கு நிகழ்ந்துள்ளது.

கடந்த முறை நிலநடுக்கம் நிகழ்ந்த ஜாவா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெம்பர் பகுதிக்கு 280 கிலோ மீட்டருக்கு தென்மேற்கே உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக இந்தோனேசியாவின் தேசிய புவி இயற்பியல் கழகம் தெரிவித்திருந்தது.

இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளதாகவும்,, ஆனாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு இது ஆற்றல் மிக்கதாக இல்லை என்று அந்த கழகம் கூறியுள்ளது.

அதேசமயம் இரண்டு வாரங்களுக்கு முன் நிகழ்ந்ச நிலநடுக்கத்தை ஒப்பிடும்போது இன்று நிகழ்ந்துள்ள நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், இதன் விளைவாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகள் உள்ளிட்டவற்றில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் நிகழ்ந்த அதிசயம்… மீட்புக் குழுவினர் நெகிழ்ச்சி!

பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர் மக்க்ள் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் தான் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. இரண்டு வார இடைவெளியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்கோனேசிய மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் 21 ஆம் தேதி (நவம்பர் 21) இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்தது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி இருந்த இந்த நிலநடுத்தின் விளைவாக அங்குள்ள குடியிருப்புகள், கட்டடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை சில நொடிகள் குலுங்கின.

இதனால் அச்சமும், பதற்றமும் அடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு தங்கள் லீட்டைவிட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களில் இடிபாடுகளில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

குழந்தைகளுக்கு ‘துப்பாக்கி, வெடிகுண்டு’ என பெயர் வையுங்க! – பெற்றோருக்கு அரசு ஆர்டர்

அதிசயம்: ஜாவா மாகாணத்துக்கு உட்பட்ட சியாஞ்சூர் பகுதியில் குகநாங் மாவட்டத்தின் கீழ்வரும் நக்ராங் கிராமத்தில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறு வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

இரண்டு நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த அஜ்கா மவுலானா மாலிக் என்ற அந்த சிறுவனை மீட்ட இந்தோனேசிய பேரிடர் படையினர், சிறுவனை மீட்டது குறித்து நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் தெரிவித்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.