Viral Video: கோயிலில் யானை சிலையின் நடுவில் சிக்கிக் கொண்ட பக்தர்… வைரலாகும் வீடியோ!

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்,  தெய்வங்களை தங்கள் மனதிற்கு ஏற்ற வகையில் வணங்குகிறார்கள். சிலர் மணியை அடித்து, தங்கள் பக்தியை வெளிப்படுவார்கள், சிலர் அங்க் பிரதட்சிணம் செய்வார்கள். சிலர் தய்வத்தை வழக்கமான முறையில் தரிசனம் செய்வதை நம்புகிறார்கள். தெய்வத்தை தரிசனம் செய்தவுடன் மக்களின் மனம் மிகவும் அமைதியடைந்த சம்பவங்களை நாம் பொதுவாக கேட்டிருப்போம், கோயிலில் தரிசனம் செய்யும்போது பக்தர் மனம் பதற்றம் அடைந்து போன சம்பவம் ஒன்று குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்த பக்தர் சவாலான ஒன்றைச் செய்ய முயன்றார். ஆனால் அதில் அவரே சிக்கிக் கொண்டார். பின்னர் அங்கிருந்த மக்கள் வந்து அவரை காப்பாற்ற வேண்டியிருந்தது. குஜராத்தில் உள்ள கோவிலில் யானை சிலைக்கு அடியில் பக்தர் சிக்கிய வீடியோ மிகவும்  வைரலாகி வருகிறது.

சிலைக்கு இடையே சிக்கியவரை காப்பாற்ற ஏராளமானோர் குவிந்தனர்

வீடியோவைப் பார்த்தால், அவர்  வேண்டுதலுக்காக ஏதோ செய்து கொண்டிருந்தபோது, ​​​​சிலையின் அடியில் சிக்கி, அதிலிருந்து வெளியேற கடுமையாக முயற்சித்ததாகத் தெரிகிறது. ட்விட்டர் பயனாளர் நிதின் பகிர்ந்துள்ள வீடியோவில், அந்த நபர் யானை சிலையின் கால்களுக்கு நடுவுல் மாட்டிக் கொண்ட நிலையில், அதிலிருந்து வெளியேற தனது கைகளையும் உடலையும் பயன்படுத்த முயற்சிப்பதைக் காணலாம். ஆனால் பயனில்லை. வீடியோவில், ​​​​அவருக்கு உதவ பலர் ஒன்றிணைவதை நீங்கள் காணலாம். பூசாரிகளும் அந்த நபரை சிலைக்கு அடியில் இருந்து வெளியே எடுக்க உதவுகிறார்கள். கோயிலுக்குச் செல்ல வந்த பல பக்தர்களும் அவரை வெளியேற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ:

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee News (@zeenews)

பக்தன் வெளியேறுவதற்கு தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறான். அவர் தனது உடலைச் சுழற்ற முயற்சிக்கிறார், மேலும் மக்கள் உதவிக்காக தங்கள் கைகளை நீட்டினர், ஆனால் அந்த நபர் சிலைக்குள் சிக்கிக்கொண்டார். அந்த நபர் சிலையிலிருந்து வெளியே வந்தாரா இல்லையா என்பது வீடியோவில் இருந்து தெளிவாகத் தெரியவில்லை. வீடியோ பகிரப்பட்டதில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. இதே போன்று, யானை சிலையின் கால்களுக்கு இடையில் சிறிய இடைவெளியில் ஊர்ந்து சென்றதால் ஒரு பெண் பக்தரும் சிக்கிய சம்பவம் 2019 இல் நடந்தது. அவர் சிலையை விட்டு வெளியே வர முயன்று, பின்னர்  பலர் அவரை காப்பாற்ற உதவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.