இந்தியாவில் இனி உயிர்வாழ முடியாது.? எச்சரிக்கும் உலகவங்கி.!

உலக வெப்பமயமாதல் தற்போது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கு உலகநாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலவகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தசாப்தங்களாக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இறப்புகளுக்கு காரணமான கடுமையான வெப்ப அலைகள் ஆபத்தான அதிர்வெண்ணுடன் அதிகரித்து வருகின்றன, விரைவில் மனித உயிர்வாழும் வரம்பை மீறும் வெப்ப அலைகளை அனுபவிக்கும் உலகின் முதல் இடங்களில் ஒன்றாக நாடு மாறும் என்கிறது உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை.

“இந்தியாவின் குளிரூட்டும் துறையில் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள்” என்ற தலைப்பில் உலக வங்கியும், கேரள அரசும் ஆய்வு மேற்கொண்டது. இந்தநிலையில் இந்தியா ஏற்கனவே அதிக வெப்பநிலையை அனுபவித்து வருவதாகவும், அது முன்னரே வந்து நீண்ட காலம் நீடிக்கும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் 2022 இல், இந்தியா ஒரு கடுமையான வெப்ப அலையின் பிடியில் மூழ்கியது. இது நாட்டை ஸ்தம்பிக்க வைத்தது. தலைநகரான புது தில்லியில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் (114 டிகிரி பாரன்ஹீட்) உயர்ந்தது. கடந்த மார்ச் மாதம், இதுவரை பதிவு செய்யப்படாத வகையில் வெப்பநிலை உயர்ந்தது என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள், மனித உயிர்வாழ்வு வரம்பை உடைக்கக்கூடும் என்று கணித்து, தெற்காசியா முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையைப் பற்றி பல காலநிலை விஞ்ஞானிகள் நீண்டகாலமாக எச்சரித்ததை சமீபத்திய அறிக்கை உறுதிபடுத்துகிறது. கடந்த ஆகஸ்ட் 2021 இல், காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (IPCC) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை, வரும் பத்தாண்டுகளில் இந்திய துணைக்கண்டம் அடிக்கடி மற்றும் கடுமையான வெப்ப அலைகளை சந்திக்கும் என்று எச்சரித்தது.

கார்பன் உமிழ்வு அதிகமாக இருந்தால், 2036-65க்குள் இந்தியா முழுவதும் வெப்ப அலைகள் 25 மடங்கு அதிகமாக நீடிக்கும் என்று G20 காலநிலை அபாய குழு 2021 இல் எச்சரித்தது என்று அறிக்கை கூறுகிறது.

மேலும் இந்தியா முழுவதும் வெப்பம் அதிகரித்து வருவது பொருளாதார உற்பத்தியை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

‘மோடி… மோடி’… ஃப்ளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி!

இந்தியாவின் 75 சதவீத பணியாளர்கள், அல்லது 380 மில்லியன் மக்கள், வெப்பம் வெளிப்படும் உழைப்பை சார்ந்துள்ளனர். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான வெப்பநிலையில் வேலை செய்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. மேலும், தெற்காசிய நாடுகளில் அதிக வெப்ப தாக்கத்தை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவிகிதம் – சுமார் 150-250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் – இந்த தசாப்தத்தின் இறுதியில் ஆபத்தில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.