இறந்தவரின் தொடையில் உயிருடன் இருந்த வெளியே வந்த பாம்பு – பிரேத பரிசோதனையில்…அலறி அடித்து ஓடிய பெண்…!

நியூயார்க்,

ஜெசிகா லோகன் என்ற 31 வயது பெண் அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் ஜெசிகா 9 ஆண்டுகளாக இந்த பணியில் உள்ளார். இந்நிலையில், தனக்கு நேர்ந்த ஒரு திகில் அனுபவத்தை ஜெசிகா பற்றி பகிர்ந்துள்ளார்.

ஒரு முறை, இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனை செய்துக்கொண்டிருந்தபோது, அந்த உடலில் இருந்து பாம்பு ஒன்று உயிருடன் வெளிவருவதை பார்த்துள்ளார்.

பாம்பு அந்த நபரின் தொடை பகுதியிலிருந்து வெளிவந்ததை பார்த்த ஜெசிகா அலறி அடித்துகொண்டு ஓடினார். பாம்பை பிடித்து அகற்றிய பிறகே மீண்டும் தன் வேலையை தொடர உடலின் அருகில் சென்றதாக அவர் தெரிவித்தார்.

ஒரு ஓடை அருகில் அந்த உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்போது உடலுக்குள் அந்த பாம்பு புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தன் அனுபவம் குறித்து பேசிய ஜெசிகா, “இறந்தவர்களின் உடல்கள் எங்கு எந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்ககூடும் என்றார்.

குளிரான, உலர்ந்த இடங்களில் உடல்கள் இருந்தால், பூச்சிகள், ஆபத்தான உயிரினங்கள் பிரேதங்களை அது அணுகாது. ஆனால், சூடான, ஈரப்பதமான இடங்களில் பூச்சிகள் உடலில் அதிகம் இருக்கும்.” என்றார்.

டாக்டராக வேண்டும் என நினைத்த ஜெசிகாவுக்கு, குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேத பரிசோதனையாளராக பணியாற்றிவருகிறார் ஜெசிகா.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.