மாண்டியா : ”எங்களுக்கு ராவண ராஜ்ஜியம் வேண்டாம். ராம ராஜ்ஜியம் வேண்டும். ராமரின் கொள்கைகளையும், குணங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும்,” என உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:
ராமனிடம் சரணடைந்தால், மனித துன்பங்கள் அனைத்தும் தீரும். எனவே, அனைவரும் ஸ்ரீராமரிடம் சரணடைந்து, ராம ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும்.
எங்களுக்கு ராவண ராஜ்ஜியம் வேண்டாம். ராமரின் கொள்கைகளையும், குணங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மயை வளர்த்து கொள்ள வேண்டும்.
சுயநலத்தை விடுத்து தொலைநோக்கு பார்வையை வளர்த்து கொள்ளுங்கள். எனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை. ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற மனப்பான்மை அனைவரிடமும் இருக்க வேண்டும்.
முதலில் கடவுளை கும்பிடுவது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். நற்செயல்கள் செய்ய வேண்டும். சமுதாயத்திற்கு நல்லது செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement