துபாய் ,
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசேன் (935) புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் . சமீபத்தில் பெர்த்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது இரட்டை சதம் மற்றும் சதம் அடித்தார்.இதனால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவரை தொடர்ந்து 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3-வது இடத்தில் ,இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 4வது இடத்தில் உள்ளார்.
இந்திய வீரர்களில் ரிஷாப் பண்ட் 5வது இடத்திலும் ,கேப்டன் ரோகித் சர்மா 9-வது இடத்திலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி 11-வது இடத்திலும் உள்ளனர்.
A new No.1
Australian star scales the summit in the @MRFWorldwide ICC Men’s Test Player Rankings for batters
Details https://t.co/UdpARWgSHM
— ICC (@ICC) December 7, 2022