வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான மனுவை அமெரிக்க பெடரல் கோர்ட் தள்ளுபடி செய்தது.
பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கசோகி. இவர், துருக்கியில் இருந்தபடி, தான் பணியாற்றும் பத்திரிகையில், சவுதி அரசு மற்றும் இளவரசர் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரைகளை வெளியிட்டுவந்தார்.
![]() |
சில ஆண்டுகளுக்கு முன், துருக்கியில் உள்ள சவுதி துாதரகத்திற்குச் சென்ற அவர், கடந்தாண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது ண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலையின் பின்னணியில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதையடுத்து, கொலை குறித்து, அமெரிக்க புலனாய்வு விசாரித்து, இது தொடர்பான வழக்கு அமெரிக்க பெடரல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சவுதி அரேபியா மன்னர் சல்மான், தனது மகன் இளவரசர் முகமதுவை பிரதமராக நியமித்தார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் அரசால் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு தலைவர்கள் மீதான குற்ற வழக்கில் சட்ட முன்மாதிரியை குறிப்பிட்டு விலக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று நடந்த விசாரணையில், ஜமால் கசோகி கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement