கனடாவில் அதிகரிக்கும் கருணைக்கொலை… பீதியை ஏற்படுத்தும் எண்ணிக்கை: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி


வெளிப்படையான மனப்பான்மை மற்றும் சகிப்புத்தன்மைக்கு பெயர்பெற்ற கனடாவில் கடந்த ஆண்டு மட்டும் கருணைக்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது.

10,000 பேர்களுக்கும் மேல்

உலகில் கருணைக்கொலை தொடர்பில் மிகவும் எளிதான விதிகளைக் கொண்டுள்ள நாடு கனடா. இதனாலையே இங்கு ஒவ்வொரு ஆண்டும் கருணைக்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

கனடாவில் அதிகரிக்கும் கருணைக்கொலை... பீதியை ஏற்படுத்தும் எண்ணிக்கை: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Canada Now Euthanizing Its Citizens

@reuters

2021ல் மட்டும் கனடாவில் 10,000 பேர்களுக்கும் மேல் கருணைக் கொலை செய்துகொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, கனடாவில் பதிவான மரணங்களில் இது 3% என்றே கூறப்படுகிறது.

மேலும் 2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், மூன்றில் ஒரு பங்கு அதிகரிப்பு எனவும் தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும், உளவியல் பாதிப்பால் அவதிப்படும் மக்களை கருணைக்கொலை செய்துகொள்ள கனடா அனுமதிக்க இருப்பதாகவே கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் பலர் தங்கள் அனுபவங்களையும், கருணைக்கொலை செய்துகொள்ள ஆலோசனை அளிக்கப்பட்டதையும் சாட்சியப்படுத்தியுள்ளனர்.
2016ல் கனடாவில் மருத்துவ காரணங்களுக்காக கருணைக்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை 1,000 என பதிவாகியுள்ள நிலையில்,

பிரபல மருத்துவர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை

2021ல் இந்த எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது.
அமெரிக்காவில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் டசின் கணக்கானோருக்கு கருணைக்கொலை பரிந்துரைத்த பிரபல மருத்துவர் ஒருவர் சுமார் 8 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தார்.

அவர் பரிந்துரைத்த நபர்களின் கருணைக்கொலையானது இரண்டாம் நிலை கொலை என நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. ஆனால் அதன் பின்னர் கொலம்பியா மாவட்டம் உட்பட அமெரிக்காவின் 10 மாகாணங்கள் கருணைக்கொலைக்கு அனுமதி அளித்தது.

கனடாவில் அதிகரிக்கும் கருணைக்கொலை... பீதியை ஏற்படுத்தும் எண்ணிக்கை: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Canada Now Euthanizing Its Citizens

@getty

1950ல் 37% அமெரிக்க மக்கள் மட்டுமே கருணைக்கொலைக்கு ஆதரவான மனநிலை கொண்டிருந்தனர். ஆனால் 1996 காலகட்டத்தில், இந்த எண்ணிக்கை 75% என அதிகரித்தது.
கனடாவில் எளிமையான விதிகள் இருப்பதால், கருணைக்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்றே கூறப்படுகிறது.

மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், விதிகளுக்கு உட்பட்டு கருணைக்கொலைக்கு அனுமதிக்க கனடா விவாதித்து வருகிறது.
மட்டுமின்றி, 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆய்வில்,

மருத்துவ உதவியினால் கருணைக்கொலை அனுமதிக்கப்படுவதால் கனடாவில் சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களை ஆண்டுக்கு $137 மில்லியன் குறைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.