கொடிய Strep A பாதிப்பால் சிறுமி அவஸ்தை: பிரித்தானிய மருத்துவமனை தொடர்பில் தாயாரின் குமுறல்


பிரித்தானியாவில் மருத்துவமனை ஒன்றில் உயிர் காக்கும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக Strep A தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தாயார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுவரை 9 சிறார்கள் மரணம்

பிரித்தானியாவில் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 சிறார்கள் மரணமடைந்துள்ள நிலையில், தாயார் ஒருவரின் வெளிப்படுத்தல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடிய Strep A பாதிப்பால் சிறுமி அவஸ்தை: பிரித்தானிய மருத்துவமனை தொடர்பில் தாயாரின் குமுறல் | Daughter Hit Deadly Strep A Mother Anguish

Credit: Ben Lack

தமது 9 வயது மகள் எல்லா Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு வெஸ்ட் யார்க்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நீண்ட 8 மணி நேரம் காத்திருந்த பின்னர்,

தொடர்புடைய மருந்து தங்களிடம் இல்லை எனவும் வேறு மருத்துவமனையை நாடவும் அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக விக்டோரியா என்பவர் தெரிவித்துள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த விக்டோரியா, தமது மகளின் நிலை மோசமடைந்து வருவதாகவும், அந்த மருந்து கட்டாயம் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
9 வயது சிறுமி எல்லா கடந்த ஒரு வாரமாக நோய்வாய்ப்பட்டுள்ளார்.

பரிந்துரைத்த மருந்து இல்லை

அவரை பரிசோதித்த மருத்துவர் Strep A பாதிப்பை உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி சிறுமியின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து காணப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவமனைக்கு சென்று சுமார் 8 மணி நேரங்களுக்கு பின்னரே, மருத்துவர் பரிந்துரைத்த மருந்து இல்லை என கூறியுள்ளனர்.

கொடிய Strep A பாதிப்பால் சிறுமி அவஸ்தை: பிரித்தானிய மருத்துவமனை தொடர்பில் தாயாரின் குமுறல் | Daughter Hit Deadly Strep A Mother Anguish

Credit: Alamy

இதனையடுத்து குடியிருப்புக்கு திரும்பியதாகவும், ஒருவழியாக குறித்த மருந்து கிடைக்கப்பெற்று தற்போது சிறுமிக்கு செலுத்தியுள்ளதாகவும் விக்டோரியா தெரிவித்துள்ளார்.
Strep A தொற்றால் பாதிக்கப்பட்டும் சிறார்களுக்கான மருந்து பிரித்தானியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விநியோகச் சிக்கல்கள், விலைவாசி உயர்வு மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை காரணமாக கூறப்படுகின்றன.
ஆனால் பிரதமர் அலுவலகம் இந்த விவகாரத்தில் இதுவரை உரிய பதிலளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.