கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே முன்விரோதத்தின் காரணமாக இளம்பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு பணிக்கன் குடியிருப்பு பகுதியில் உள்ள பிரம்ம சக்தி அம்மன் கோயிலில் நடைபெற்ற கொடைவிழாவில் சாமியாடியது தொடர்பாக பகுதியை சேர்ந்த பால்தங்கம் மற்றும் விஜயன் என்பவருக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கொடை விழாவில் பால்தங்கம் சாமியாடியபோது, கோயிலில் பலகாரம் சுடுவதற்காக கொதி நிலையில் இருந்த எண்ணெயை எடுத்து பால்தங்கத்தின் மீது விஜயன் ஊற்றியுள்ளார். இதனால், பால்தங்கம் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதன் பின்னர், அங்கிருந்தவர்கள் பால்தங்கத்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சாமியாடிய பெண் மீது கொதித்த எண்ணெய்யை ஊற்றிய இளைஞரை கைது செய்தனர்.