சிம்பு திருமணம் கடவுள் கையில்…. – டி ராஜேந்தர்

‛மாநாடு, வெந்து தணிந்தது காடு' படங்களுக்கு பின் ‛பத்து தல' படத்தில் நடித்துள்ளார் சிம்பு. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சிம்பு இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். அவர் வாழ்வில் சில காதல் தோல்விகளும் வந்து சென்றன. தொடர்ந்து சிம்புவிற்கு ஏற்ற மணமகளை தேடி வருவதாக அவரது தந்தை டி.ராஜேந்தர் கூறி வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரம், வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் டி ராஜேந்தர் சாமி தரிசனம் செய்தார். சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛என் மகனுக்கு ஏற்ற மணகளை, எங்கள் வீட்டிற்கு வரப்போகும் குலமகளை நாங்கள் தேர்வு செய்வதை விட இறைவன் தான் தேர்வு செய்து கொடுக்கணும். அதனால் தான் இந்த வழக்கை வழக்கறுத்தீஸ்வரரிடமே ஒப்படைத்துவிட்டேன். கடவுள் அருளால் சிலம்பரசனுக்கு விரைவில் திருமணம் நடக்கும்'' என்றார் டி ராஜேந்தர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.