விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த போட்டியிலிருந்து இதுவரை மொத்தம் 8 பேர் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையில் கடந்த வாரம் எலிமிநேஷனில் இருந்து குயின்சி வெளியேறினார். 8 வாரங்களுக்கு வீட்டில் இருந்த குயின்சி மொத்தம் ரூ 1.60 லட்சம் வரை பெற்றிருக்க கூடும் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது வரை பிக் பாஸ் சீசன் 57 நாட்களை கடந்துள்ள நிலையில் வரும் நாட்களில் வைல்ட் கார்டு எண்ட்ரி இருக்கும் என்று எதிறப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் வெற்றி பெற்று தனலட்சுமி நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் சென்று விட்டார். மேலும் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் இருப்பதால் இந்த வாரம் கட்டாயம் ராம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே ராம் பெரிதாக மக்களை கவரவில்லை. மேலும் அவருடன் ADK-யும் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் மணிகண்டன், சிவின், தனலட்சுமி ஆகியோருக்கு இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டு இருந்தது. இதில் மணிகண்டன் வெற்றி பெற்று இருந்தது. எனவே அவர் இந்த வார தலைவராகி விட்டார் இதனால் அவர் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.