பெட்ரோல் விலை – பி.டி.ஆர். கேள்விக்கு அண்ணாமலை பதிலடி!

பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கடுமையாக விலை சரிந்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

சென்னையில் கடந்த 200 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த பிறகும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது ஏன் என தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும், பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெட்ரோல் டீசல் விலை கச்சா எண்ணெய் விலையை சார்ந்து இல்லாமல், இங்கு வேரெதும் ‘சக்திகளை’ சார்ந்து இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? என்று பதிவிட்டுள்ளார். பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும் என்று கூறியுள்ளார். ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.