போர்ச்சுகல் கோல் மழை! ரொனால்டோவுக்கு மாற்றாக களமிறங்கி ஹாட்ரிக் கோல் அடித்த வீரர்… தாறுமாறு வெற்றி



கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் போர்ச்சுகல் கோல் மழை பொழிந்து சுவிட்சர்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தியுள்ளது.
அதன்படி 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கன்கலோ ராமோஸ்

இப்போட்டியில் ரொனால்டோ பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
பின்னர் மாற்று வீரராக (substitute) 20 நிமிடங்கள் களத்தில் கிடைத்தாலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்த தவறினார்.
அவருக்கு பதிலாக கன்கலோ ராமோஸ் என்ற 21 வயது இளம் வீரர் களமிறங்கினார்.

போட்டி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் 17வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார் ராமோஸ்.
உலகக்கோப்பை தொடரில் அவருடைய முதல் கோல். 33வது நிமிடத்தில் மற்றொரு போர்ச்சுகல் வீரரான பெப்பே கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது.

கோல் மழை

இரண்டாவது பாதியிலும் தொடர்ந்த போர்ச்சுக்கல்லின் ஆதிக்கத்தில் ராமோஸ் 51-வது நிமிடம் மற்றும் 67-வது நிமிடம் இரண்டு கோல்கள் அடித்து அசரவைத்தார். அதேபோல், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், பேல் லியோ 92-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தாலும் ஆட்ட நேரம் முடிந்தது. இதனால், இறுதியில், போர்ச்சுக்கல் 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ஹாட்ரிக் கோல்

21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் தனது அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் கோல் அடித்து உலக அரங்கில் அழுத்தமான வருகையை பதிவு செய்துள்ளார்.
அத்துடன், உலகக் கோப்பை வரலாற்றில், 32 ஆண்டுகளுக்குப் பின் நாக்-அவுட் சுற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் தட்டிச் சென்றார்.

74-வது நிமிடத்தில் மாற்று வீரராக ரொனால்டோ, களம் கண்டதும் ரசிகர்கள் எழுப்பிய உற்சாக குரலால் மைதானமே அதிர்ந்தது. வந்த உடனேயே அவர் ஒரு கோல் அடித்தார். ஆனால், அது ஆஃப் சைடு கோலாக மாறி, வீணானது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.