அண்ணாமலையை தூக்க இவர்தான் சரி.. காயத்ரி ரகுராம் வியூகம் எடுபடுமா..?

பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் தினம் தினம் அண்ணாமலையை மறைமுகமாக சாடி வருகிறார். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அவர் வகித்து வந்த பதவியை இசை அமைப்பாளர் தீணாவுக்கு கொடுத்தது காயத்ரி ரகுராமால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், தனிப்பட்ட முறையில் அண்ணாமையை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் உள்ள காயத்ரி ரகுராம், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் பக்கம் சாய்ந்துள்ளார்.

கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த திருச்சி சூர்யா பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில், ”இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் . அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும் என்றும் தமிழகத்தில் பாஜக வெற்றி அடைய வேண்டும் என்றால் எல்.முருகனும், கேசவ விநாயகனும் அண்ணாமலையின் வழியில் தலையிட வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் அலசியபோது, திருச்சி சூர்யா கூறுவது உண்மைதான். அண்ணாமலையின் விருப்பமும் அதுதான். கட்சி தலைவராக அவரால் சில விஷயங்களை வெளிப்படையாக கூற முடியாது என்றும் திருச்சி சூர்யா மூலமாக அண்ணாமலை அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்றனர்.

இந்த நிலையில் கேசவ விநாயகனை குறித்து திருச்சி சூர்யா பேசியதற்கு அண்ணாமலையின் பங்களிப்பு இருக்கலாம் என்ற விதமாக காயத்ரி ரகுராம் ட்வீட் போட்டுள்ளார். அதில், திருச்சி சூரியா கேசவ விநாயகம் ஜியை ஏன் வெறுக்கிறார்? திருச்சி சூரியாவுக்கு கேசவவிநாயகம் ஜியுடன் வேலை இல்லை. திருச்சி சூரியா கட்சியில் சேர்ந்ததில் இருந்து கேசவவிநாயகம் ஜியை 5-6 முறை சந்தித்திருக்க வேண்டும். இது தனிப்பட்ட வெறுப்பா அல்லது வேறொருவரின் வெறுப்பா?

முருகன் ஜி மாநில தலைவராக இருந்த போது நீங்கள் இருந்ததில்லை. அவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? அவர்கள் உங்களை எந்த விதத்தில் தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்தார்கள்? அல்லது அண்ணாமலை ஜியை எந்த வகையில் தொந்தரவு செய்தார்கள்? தயவு செய்து வெளிப்படையாக சொல்லுங்கள்.

நான் பேட்டியைப் பார்த்தபோது, அது அவருடைய பிரச்சனையல்ல, அவர் பேசியது வேறொருவரின் பிரச்சனை. கேசவவிநாயகம் ஜி மற்றும் முருகன் ஜி பற்றி பேச அவர் அனுப்பப்பட்டாரா?” என இவ்வாறு காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவில் சாதாரண தொண்டனாக இருந்து வரும் காயத்ரி ரகுராம் கட்சியின் உள் விவகாரங்களில் ஏன் வெளிப்படையாக பொதுவெளியில் விவாதிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.