இமாச்சலில் நிலவும் கடும் போட்டி – பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் உள்ளதா?

இமாச்சல பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் வெற்றியை கணிக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 
இன்று குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தற்போது அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் இந்த முறையில் பாஜகவே ஆட்சியமைக்கும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக கேள்விக்குறியை பெரிதாக்கி இருக்கிறது இமாச்சல பிரதேசம். காரணம், அங்கு 1985க்கு பிறகு ஒரே கட்சி இருமுறை ஆட்சிக்கு வந்ததில்லை என்பதுதான். கடந்த முறை பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இந்த முறை எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்தது. அதனை அதிகரிக்கும் விதமாக பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி முன்னிலை வகித்து கணிக்கமுடியாத சூழலை உருவாக்கி வருகிறது.
இந்த முறையும் ஆட்சியை பிடித்தே ஆகவேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நேரடி பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அதேபோல், காங்கிரஸ் சார்பிலும் ராகுல் காந்தி தலைமையில் நாடு முழுவதும் பாரத் ஜூடோ யாத்திரை முன்னெடுக்கப்பட்டது. டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியும் பரப்புரையை தீவிரப்படுத்தி அங்கு போட்டியிட்டது.
image
55 லட்சம் வாக்காளர்கள் உள்ள இமாச்சலில் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 75% வாக்குகள் பதிவாகி இருந்தது. 68 உறுப்பினர்களைக்கொண்ட சட்டமன்றத்தில் பங்கேற்க, 412 போட்டியாளர்கள் களத்தில் இறங்கினர். இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் 33 தொகுதிகளிலும், பாஜக 31 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 4 இடங்களிலும், பூஜ்ஜிய இடங்களே கிடைத்துள்ள ஆம் ஆத்மி மக்கள் நம்பிக்கை பெறவில்லை எனவும் தெரிகிறது. இருப்பினும் இந்த இருமாநில தேர்தல் முடிவுகளும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாடளவில் கவனத்தை பெற்றுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.