உலகப் பணக்காரர் என்ற கிரீடத்தை எலான் மஸ்கிடம் இருந்து பறித்த Bernard Anault!

உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற கிரீடம் ட்விட்டர் மற்றும் டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க்கிடம் இருந்து சில மணி நேரங்களுக்கு பறிக்கப்பட்டது. இருப்பினும், அவர் விரைவில் அந்த இடத்தை திரும்பப் பெற்றார். உலக பணக்காரர்களின் செல்வம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள போர்ப்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டெஸ்லா பங்குகளின் வீழ்ச்சி மற்றும் ட்விட்டரில் $44 பில்லியன் டாலர் முதலீடு ஆகியவை காரணமாக மஸ்க்கின் நிகர மதிப்பு குறைந்தது.

51 வயதான மஸ்க்குக்குப் பதிலாக, பெர்னார்ட் அர்னால்ட் சில மணிநேரங்களில் உலகின் பணக்காரர் ஆனார். அவர் ஆடம்பர பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் தாய் நிறுவனமான LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆவார். அவரது மொத்த சொத்து மதிப்பு 185.3 பில்லியன் டாலர்கள் அர்னால்ட்டின் சொத்து எலோன் மஸ்க்கின் சொத்துக்களை விட 400 மில்லியன் டாலர்கள் அதிகமாக இருந்ததாக . ஃபோர்ப்ஸின் அறிக்கை கூறுகிறது. இருப்பினும், பின்னர் மஸ்கின் சொத்து மதிப்பு அதிகரித்து அது $185.7 பில்லியன்களை எட்டியது. எனினும் இரு கோடீஸ்வரர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2021 முதல், எலோன் மஸ்க் உலகின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை முந்திக் கொண்டு அவர் இந்த நிலையை அடைந்தார். 2022 ஆம் ஆண்டில், மஸ்கின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் டெஸ்லாவின் பங்குகளின் மதிப்பு கடந்த இரண்டு வருடங்களில் மிகக் குறைந்த அளவில் இருப்பதுதான். எலக்ட்ரானிக் கார் நிறுவனம் டெஸ்லா தற்போது சீனாவில் கோவிட் நோயின் கடுமையான விதிகள் காரணமாக பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அமெரிக்காவிற்கு வெளியே டெஸ்லாவின் மிகப்பெரிய சந்தை சீனா. மஸ்க் ட்விட்டரில் அதிக கவனம் செலுத்தியதால் டெஸ்லாவின் பங்குகளின் மதிப்பு குறைந்துள்ளது என டெஸ்லா பங்குதாரர்கள் கருதுகின்றனர். மேலும் தலைமை நிர்வாக அதிகாரியே சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள சுமார் 20 மில்லியன் பங்குகளை விற்றார்.

மேலும் படிக்க | இனி ஆட்குறைப்பு இல்லை… ஆள் சேர்ப்பு தான்… எலான் மஸ்கின் அடுத்த அதிரடி!

கடந்த மாதம் ட்விட்டரை எலான் மஸ்க் $44 பில்லியன் கொடுத்து வாங்கினார். மஸ்க் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து, நிறுவனத்தின் 60 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டனர். டெஸ்லா மற்றும் ட்விட்டர் தவிர, மஸ்க் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நியூராலிங்க் ஆகியவற்றையும் வைத்திருக்கிறார். நியூராலிங்க் என்பது மனித மூளையை கணினியுடன் இணைக்க அதி உயர் அலைவரிசை மூளை இயந்திர இடைமுகங்களை உருவாக்கும் ஒரு முயற்சியாகும்.

மேலும் படிக்க | வேறு வழியே இல்லை… நாள் ஒன்றுக்கு $4 மில்லியன் இழப்பு: பணி நீக்கம் குறித்து எலான் மஸ்க்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.