
குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது
சட்டசபை தேர்தல் நடைபெற்ற குஜராத் மாநிலத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

காலை 10 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி 146 இடங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 26 இடங்களிலும், ஆம் ஆத்மி – 8 இடங்களிலும், மற்றவை- 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இதே நிலை நீடித்தால், குஜராத்தில் 7-வதுமுறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றும். தொடர்ந்து முன்னிலை வகிப்பதால், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் தற்போதே வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர்.
newstm.in