குஜராத் சட்டசபை தேர்தல் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று(டிச.,08) நடைபெற்று வருகிறது. காங்., கட்சியில் இருந்த ஹர்திக் படேல் தேர்தலுக்கு முன்பாக பாஜ.,வில் சேர்ந்தார். இதையடுத்து அவர் குஜராத் சட்டசபை தேர்தலில் விராம்கம் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது ஓட்டு எண்ணிக்கைப்படி ஹர்திக் படேல் முதலில் பின்தங்கி இருந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்றார். இந்த தொகுதியில் இரண்டாவது இடத்தில் ஆம்ஆத்மி கட்சியும், மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement