கூகுள் – அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களில் 'கேஜிஎப் 2'

2022ம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். மாதம் பிறந்த உடனேயே இந்த ஆண்டைப் பற்றிய 'ரீவைண்ட்' விஷயங்களை ஆரம்பித்துவிட்டார்கள். உலக அளவில் தேடுதல் இணையதளங்களில் முதலிடத்தில் இருக்கும் கூகுள் நிறுவனமும் சில பல பட்டியல்களை வெளியிட ஆரம்பித்துவிட்டது.

அந்த விதத்தில் இந்த ஆண்டில் அதிக அளவில் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் 5 இடங்களை வெளிநாட்டுத் திரைப்படங்கள் பெற்றிருந்தாலும் 6வது இடத்தில் ஹிந்திப் படமான 'பிரம்மாஸ்திரா' படமும், 8வது இடத்தில் கன்னடத் திரைப்படமான 'கேஜிஎப் 2' படமும் இடம் பிடித்துள்ளன. தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள் எதுவும் இடம் பிடிக்காத நிலையில் கன்னடப் படமான 'கேஜிஎப் 2' டாப் 10ல் இடம் பிடித்திருக்கிறது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்

1.தோர் – லவ் அன்ட் தண்டர்

2.பிளாக் ஆடம்

3.டாப் கன் – மேவ்ரிக்

4.த பேட்மேன்

5.என்கான்டோ

6.பிரம்மாஸ்திரா

7.ஜுராசிக் வேர்ல்டு – டொமினியன்

8.கேஜிஎப் 2

9.அன்சார்ட்டட்

10.மோர்பியஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.