அரசியலமைப்பின் 41அ(1)(ஊ) யாப்பின் பிரகாரம் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கம் வகிக்கும் அரசியற்கட்சி அல்லது சுயேட்சைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கத்துக்கு அமைய நியமிப்பதற்கான விசேட கூட்டம் 2022 டிசம்பர் 08 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை 01 இல் இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசிலமைப்புப் பேரவையின் உறுப்பினராக உரிய உறுப்பினரொருவரை நியமிப்பதற்கு எதிர்க்கட்சித்தலைவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அனைத்து உறுப்பினர்களுக்கும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதேபோன்றுஇ அந்தக் கூட்டத்திற்கு வருகைதராத உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் பெயர்கள் அல்லது கோரிக்கைகள் தொடர்பில் எந்தவகையிலும் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற செய்தி