பிரான்ஸ்- இங்கிலாந்து மோதல்… கத்தாரை நெருக்கும் கனமழையும் சூறாவளியும்: யாருக்கு சாதகம்?


கத்தார் உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் சனிக்கிழமை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

கத்தாரில் சூறாவளி மற்றும் கனமழை

சனிக்கிழமை கத்தாரில் சூறாவளி மற்றும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இங்கிலாந்து அணிக்கு அது சாதகமாக அமையலாம் என நம்பப்படுகிறது.

பிரான்ஸ்- இங்கிலாந்து மோதல்... கத்தாரை நெருக்கும் கனமழையும் சூறாவளியும்: யாருக்கு சாதகம்? | Tornadoes And Hailstones Batter Qatar

@getty

கத்தாரில் காலிறுதி ஆட்டங்கள் முன்னெடுக்கப்படும் மைதானத்திற்கும் 10 மைல்கள் தொலைவில் சூறாவளி ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி, வார இறுதியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதும், இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமையலாம் என கூறுகின்றனர்.

கத்தாரில் ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே மழை பெய்யும் நிலை உள்ளது. இந்த நிலையில் வார இறுதி நாட்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக காலநிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே, பிரான்ஸ் அணியுடனான கடைசி எட்டு ஆட்டங்களில் 5ல் இங்கிலாந்து வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது ரசிகர்களுக்கு கெட்ட கனவாகவே நீடிக்கிறது..

பிரான்ஸ்- இங்கிலாந்து மோதல்... கத்தாரை நெருக்கும் கனமழையும் சூறாவளியும்: யாருக்கு சாதகம்? | Tornadoes And Hailstones Batter Qatar



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.