மர்மம் விலகியது… பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் அடையாளம் வெளியானது


அமெரிக்காவில் துப்புத்துலங்காத வழக்குகளில் ஒன்றாக கருதப்பட்ட பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகாரிகள் தற்போது அந்த சிறுவனை அடையாளம் கண்டுள்ளனர்.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் பெயர் Joseph Augustus Zarelli எனவும்,

மர்மம் விலகியது... பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் அடையாளம் வெளியானது | Murder Victim Finally Identified

@AP

1953 ஜனவரி 13ம் திகதி குறித்த சிறுவன் பிறந்துள்ளதாகவும்,
நான்கு வயதிருக்கும் போது படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

1957ல் பிப்ரவரி 25ம் திகதி ஒரு அட்டைப்பெட்டிக்குள் போர்வை ஒன்றால் போர்த்தப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.
சடலம் கண்டுக்கப்பட்ட சில நாட்களுக்கு முன்னர் சிறுவன் மரணமடைந்திருக்கலாம் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

மன்னிக்க முடியாத ஒன்று

மொத்தமாக சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த சடலம், அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்து காணப்பட்டது.
அந்த இளம் வயதில் அவ்வாறான கொடூரத்தை சிறுவன் எதிர்கொண்டுள்ளது மன்னிக்க முடியாத ஒன்று என காவல்துறை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மர்மம் விலகியது... பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் அடையாளம் வெளியானது | Murder Victim Finally Identified

@missingkid.org

தற்போது சிறுவனின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் தெரியவந்துள்ள நிலையில், இனி விசாரணை துரிதப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், சிறுவனின் சகோதரர்கள் தற்போதும் உயிருடன் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும்,
சிறுவன் குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, பெற்றோரை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலைக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.