Gujarat Election Result: ட்விட்டரில் மீம்ஸ் திருவிழா, நெட்டிசன்களின் அரசியல் அலப்பறை!!

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களும், இன்று வெளிவந்துகொண்டிருக்கும் முடிவுகளும் பல அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. ஆளும் பாஜக 150 சட்டமன்ற இடங்களை கைப்பற்றி வரலாறு காணாத சாதனையை அடையும் நிலையில் உள்ளது. கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனப் போக்குகள் காட்டுகின்றன. அது ஒருபுறமிருக்க, சமூக ஊடக பயனர்களின் கவனத்தையும் இரு மாநில தேர்தல் முடிவுகள் ஈர்த்துள்ளன. இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ட்விட்டரில் மீம்ஸ்களின் புயல் வீசி வருகின்றது. தேர்தல் மூடை அதிகரிக்கச்செய்ய நெட்டிசன்கள் பல ட்வீட்களை அள்ளி வீசி வருகிறார்கள். 

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் முறையே 182 மற்றும் 68 இடங்களுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில், “Cheating”, “EVM” மற்றும் அரசியல் சூழ்நிலையுடன் ஒத்திசைவான பிற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகின்றன. 

தில்லி எம்சிடி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியால் குஜராத் தேர்தலில் எடுபட முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் மனநிலையை விளக்கும் பல மீம்கள் இணையத்தை வலம் வருகின்றன. 

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிலை, அன்னியன் படத்தில் வரும் விக்ரம் போல் உள்ளதாக ஒரு பயனர் கூறியுள்ளார். தில்லியில் அன்னியன், ஆனால், குஜராத்தில் அம்பி என்பதை இந்த மீம் விளக்குகிறது. 

காங்கிரஸ் கட்சியின் மோசமான நிலையை விளக்கும் மீம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

சமீப காலங்களில் முகவும் பிரபலமான புஷ்பா படத்தின் காட்சியின் உதவியோடு குஜராத் முடிவுகளை விளக்கியுள்ள ஒரு பயனர், “குஜராத் தேர்தலில் 80%க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்ற பிறகு ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த மோடி ஜி” என்று அதில் எழுதியுள்ளார். 

இன்னும் பல வேடிக்கையான மீம்களையும் இங்கே காணலாம்:

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.