ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்சர்லையா பிரசாத்(30). திருமுடிவாக்கத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் பாபிலோனா( வயது 23) ஜாபர்கான் பேட்டையில் தங்கி ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவரும் காதலித்து வந்தனர் . பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
பின்னர் ஜாபர்கான் பேட்டை செல்வதற்காக ‘ u Turn’ போட்ட போது, அந்த வழியாக வந்த கும்மிப்டிபூண்டியில் இருந்து சைதாப்பேட்டைக்கு இரும்பு கம்பிகளை ஏற்று வந்த ட்ரெய்லர் லாரி மோதி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது ட்ரெய்லர் லாரி இருவர் மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய் போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தவாசியை சேர்ந்த டிரைவர் பொன்னனை (39) கைது செய்தனர்.
இதே போல் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையில் டாரஸ் லாரி மோதி, உறவினர் சுரேஷ்குமாருடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்த மளிகை கடை உரிமையாளர் நிர்மலா வயது 39 உயிரிழந்தார். இது தொடர்பாக புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய் போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஹரிராம் வயது 59 என்பவரை கைது செய்தனர்.