தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் முக்கிய ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் நீர்நிலைகள் முழுவதும் நிரம்பியள்ளது. மேலும், ஒரு ஒரு சில நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் புதியதாக மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 11.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரி இடையே, மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்காரணமாக இன்று வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி அணையில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு 100 கன அடிநீர் முதற்கட்டமாக உபரி நீர் திறக்கப்படுகிறது. இதனால், உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.