
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் இன்று. இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர், நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் யூபிஏ தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக மாற வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.