பிக்பாஸில் மைனா நந்தினியின் சம்பளம் இவ்வளவா? வாயடைத்து போன தனலட்சுமி!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.  மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டைக்கும் பஞ்சமில்லை, ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை. ஆனால் சில ரோமியோக்கள் இந்த சீசனை விட்டு வெளியேறியதிலிருந்து பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும் அதிரடி காட்சிகள் மட்டும் இருந்து வருகிறது.  இருப்பினும் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததாக இருப்பதாகவே சிலர் கருதுகின்றனர், அசீம் எவ்வளவு தான் சண்டைபோட்டு பலரின் வெறுப்புக்களை சந்தித்தாலும் அவர் தான் உண்மையாக விளையாடுகிறார் என்றும், விக்ரமன் மற்றும் ரச்சிதா போன்ற சிலர் சேஃப் கேம் விளையாடுவதாகவும், போட்டியாளர் ராம் நிகழ்ச்சியில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை என்றும் இந்நிகழ்ச்சியை பற்றிய கருத்துக்கள் வந்துகொண்டிருக்கிறது.

விஜே கதிர் நான் இந்த நிகழ்ச்சியில் தான் இருக்கிறேன் என்பதை எப்போதாவது காட்டிவிட்டு செல்கிறார்.  கடந்த வாரம் இந்நிகழ்ச்சியிலிருந்து குயின்சி வெளியேற்றப்பட்டார், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக கமல் கூறியுள்ளார்.  இந்நிலையில் மைனா நந்தினியின் சம்பளம் பற்றி மணிகண்டனும், தனலக்ஷ்மியும் பேசிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.  பிக்பாஸ் வருவதற்கு முன்னரே மைனா நந்தினி பிரபலமானவர் தான், பல படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்திருக்கிறார்.  சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் இவர் மைனா என்று அழைக்கப்படுகிறார்.  இந்நிகழ்ச்சியில் நந்தினி மீது ரசிகர்கள் பலருக்கும் வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது, ஆர்ம்பத்தில் இவர் க்ரூப்பிசம் செய்வதாக கூறப்பட்டது பின்னர் இவர் பிறரை பற்றி புறம் பேசுவது போன்ற செயல்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை.

dhana

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மணிகண்டன், தனலட்சுமியிடம் வாங்கும் சம்பளத்திற்கு தகுந்த வேலையை மைனா இங்கு செய்யவில்லை என்று கூறுகிறார்.  உடனே மைனா எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்த தகவலை மணிகண்டனிடம் தனலட்சுமி ஆர்வமாக கேட்கிறார்.  அப்போது மைனா பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ரூ.1.5 லட்சம் வாங்குவதாகவும், இந்நிகழ்ச்சியை விட்டு அவர் வெளியே செல்லும்போது கிட்டத்தட்ட அவருக்கு ரூ.90 லட்சம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.  இந்த செய்தி தனலட்சுமியை மட்டுமல்ல நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.